கத்தி படத்திற்கு பின் முருகதாஸ்  அடுத்த என்ன பட்ம் இயக்கபோகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேலையில் திடீரென தெலுங்கை நோக்கி சென்றார். அங்கு மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் படத்தை இயக்கினார். தற்போது வெளியீடுக்கு தயாராகிவிட்டது ஸ்பைடர். இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல்களும் வந்தவண்ணம் உள்ளன. விஜயை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சன் பிச்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தை பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்த படமும் கத்தியை போன்றே கண்டிப்பாக சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்தை கூறும் வகையில் இருக்குமாம்.

அதுமட்டுமல்ல விஜய் படத்தில் வழக்கமாக இடம்பெறும்  ஆடல், பாடல் என்று இந்த படத்தில் எதிர்பார்க்கக் கூடாது. முழுக்க விஜய் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.