நா.முத்துக்குமார் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத கவிஞராய் இருந்தவர். கவிஞர் கண்ணதாசன், வாலிக்கு பிறகு ஆக சிறந்த இலக்கிய வித்தகராய் இருந்தவர், ஆனந்த யாழை மீட்டுகிறாள், எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே என தமிழ் சொல்லாடல் இவரது பாட்டில் விளையாடும்.

வாழ்ந்தது குறுகிய காலமாய் இருந்தாலும் இனிமையான பல பாடல்களை நமக்களித்து மிக இளம் வயதில் கடந்த ஆகஸ்ட் 2016 இதே தேதியில் திடீர் என குறைந்த வயதில் மறைந்தது பல சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று சமூக வலைதளங்களான டுவிட்டர் பேஸ்புக்கில் அவரது பாடலை விரும்பிய கோடானு கோடி ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.