சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ‘மெர்சல்’ டெக்னீஷியன்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராக் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீமராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடையவுள்ளது

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் கலை இயக்குனராக முத்துராஜ் பணிபுரியவுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன், விஜய்யின் ‘மெர்சல், ரஜினியின் ‘2.0 ஆகிய படங்களுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது