தமிழில் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கர்ளின் மனதில் இடம் பிடித்தவர் மஞ்சிமா மோகன்.

இவர் கலியோஞ்சல் என்னும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஒரு வடக்கன் செல்பி என்னும் மலையாள படத்தில் கதாயகியாக அறிமுகமானார். தற்போது மலையாளம், தெலுகு, தமிழ் என படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருவது மகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது.ஏற்கனவே விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து வரும் சத்ரியன் படம் முடியும் நிலையில் உள்ளது இதை தொடந்து விஷ்ணு விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

“எனக்கு வெயிட்டான, அழுதுவடியும் கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை. சாப்ட், கலர்புல் மற்றும் ஜாலியான பெண்ணாகவே நடிக்க விரும்புகிறேன். இந்த விஷயத்தில் என் ரோல் மாடல் நடிகை நயன்தார தான்” என்கிறார் மஞ்சமா மோகன்.