‘மெர்சல்’ படத்தில் சத்யராஜ், ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

ஆனால் அந்த கேரக்டர் அதிக முக்கியத்துவம் இல்லாத கேரக்டராக படத்தில் இருந்தது.

இதுகுறித்து சத்யராஜ் கூறிய போது, ‘உண்மையில் எனது கேரக்டர் குறித்த காட்சிகள் அதிகம் படமாக்கப்பட்டது. நான் சிகப்பு மனிதன் ‘ படத்தில் பாக்யராஜ்-செந்தில் காட்சிகள் போன்று சில சுவாரஸ்யமான காட்சிகள் படமாக்கப்பட்டது.

ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகள் வெட்டப்பட்டது. இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அட்லி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.