மிஷ்கின் மீது மைத்ரேயா என்ற நடிகர் புகார்களை தெரிவித்துள்ளார். தன் தந்தையிடம் தன்னை வைத்து படம் எடுப்பதாக கூறி அக்ரிமெண்ட்டில் கையெழுத்து இட்டு, பணம் பெற்றுவிட்டு இரண்டு வருடங்களாக பல வித காரணங்களை கூறி படம் எடுக்க மறுப்பதாகவும்,

சொன்னபடி சொன்ன தேதியில் படம் இயக்காமல் விஷாலை வைத்து படம் இயக்கி அந்த படம் வந்து விட்ட பிறகும், மிஷ்கின் எனக்கு படம் செய்யாமல் எனக்கு தயார் செய்து வைத்திருந்த கதையை உதயநிதிக்காக மாற்றி சைக்கோ என எடுத்து வருகிறார்.

சைக்கோ படத்திற்காக இரண்டு வருடம் ஹோம் ஒர்க் செய்ய சொன்னார் அனைத்தையும் என்னால் முடிந்தவரை செய்துவிட்டேன். இதுவரை சரியானதொரு முடிவை சொல்லவில்லை. பணத்தையும் தரவில்லை என தன் பக்கத்து நியாயத்தை பேட்டியாக கொடுத்துள்ளார்.