ஒரு ஃபைனான்சியரிடம் பணத்தை வாங்கிவிட்டு திருப்பி கொடுக்காத விவகாரத்தில் தனது அடுத்த படத்தை எடுக்க முடியாத நிலைக்கு மிஷ்கின் தள்ளப்பட்டுள்ளார்.

துப்பறிவாளன் படத்துக்கு பின் சைக்கோ என பெயர் வைக்கப்பட்ட கதையை இயக்குனர் மிஷ்கின் உருவாக்கினார். அந்த கதையை 150 படத்திற்கு மேல் ஃபைனான்ஸ் செய்த ஒருவரின் மகனுக்கு சொல்லியிருக்கிறார் மிஷ்கின். அதற்காக ரூ.1 கோடி அட்வான்ஸும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். ஆனால், அந்த கதையை உதயநிதி ஸ்டாலினை வைத்து தற்போது எடுத்து வருகிறார். படம் ஏறக்குறைய முடிவும் நிலையில் உள்ளது.

நல்ல மனம் கொண்ட அந்த ஃபைனான்சியர் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ நீதிமன்றத்துக்கோ செல்லாமல் மிஷ்கினின் மனசாட்சியே நீதிமன்றம் என பொறுமையாக காத்திருந்தார். ஆனால், பணத்தையும் திருப்புக்கொடுக்கவில்லை. அவரின் மகனை வைத்து படமும் எடுக்கவில்லை.

எனவே பொறுமையிழந்த அவர் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, அவரிடம் வாங்கிய ஒரு கோடி பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லது அந்த ஃபைனான்சியரின் மகன் மைத்ரேயனை வைத்து படத்தை இயக்கி கொடுத்துவிட்டு, அடுத்து அவர் துப்பறிவாளன் 2 படத்தை இயக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இப்படி செய்யலாமா மிஷ்கின்?