ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் உதயநிதி ஸ்டாலின். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. விரைவில் முன்னணி நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட உதயநிதிக்கு எதிர்பார்த்த அனைத்து படங்களுமே தோல்விதான். மனிதன் படம் மட்டும் அவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது.

தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலை மானே என்ற படத்தில் நடித்து வருகிறார். தமன்னா ஜோடியாக நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் உதயநிதி அடுத்து நடிக்க உள்ள படம் அனைவரையும் எதிர்ப்பார்க்க வைத்துள்ளது. காரணம் இப்படத்தின் இயக்குனர். வித்தியாசமான படங்களை கொடுக்கும் மிஷ்கின் தான் அந்த இயக்குனர். இந்த படத்தில் வித்தியாசமான உதய நிதியை நாம் பார்க்கலாம் என்பதே உண்மை.