தற்போது எல்லாம் மறைந்த நடிகர், நடிகைகளின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி மாஸ் ஹிட்டை கொடுத்தது. இது மட்டுமல்லாது பிரபல கவர்ச்சி நடிகை சில்க்கின் வாழ்க்கையும் ஏற்கனவே படமாக வெளிவந்துள்ளது. அதுபோல தெலுங்கு நடிகரும், மறைந்த ஆந்திர முதல்வருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது. இவரும் மறைந்த எம்.ஜி.ஆரைப்போல் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்தவர். என்.டி.ராமராவ் தெலுங்க சினிமாவில் ஓகே என்று இருந்தவர்.

அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களையும் இந்த படத்தில் காட்சிப்படுத்துகிறார்கள். ரூ.50 கோடி செலவில் படம் தயாராகிறது. இந்த படத்தில் என்.டிஆர் மனைவியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே சில்க் சுமிதாவின் வாழ்க்கை கதையில் நடித்துள்ளார்.

இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவும் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலனும் நடிக்கின்றனர். சந்திரபாபுநாயுடுவாக ராணா நடிக்கிறார். என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளவர் சாவித்திரி. அவரது கேரக்டரில் சாவித்திரியாக நடிக்க இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஏற்கனவே நடிகையர் திலகம் சாவித்தியின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாவித்திரியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர். இந்த படத்தை கிரிஷ் இயக்குகிறார்.

sridevisridevi

keerthi suresh

 

என்.டி.ஆர் படத்தில் நடிக்க வித்யாபாலன் முதலில் தயங்கினாராம். இதனால் என்.டி.ராமராவ் குடும்பத்தினர் வற்புறுத்தி நடிக்க வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.1½ கோடி சம்பளம் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத் வந்த வித்யாபாலனை என்.டி.ஆர் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்து மகிழ்வித்தனர்.