நாச்சியார் படத்தில் ஜோதிகா, ஜி.வி பிரகாஷ் நடித்துள்ளனா். இதில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசரில் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தை சா்ச்சையில் சிக்கியது. அது குறித்து நடிகை ஜோதிகா இந்த வசனத்தை ஒரு ஆண் பேசினால் ஏதும் சொல்லமாட்டா்கள் என்று கூறியிருந்தார். தற்போது இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.