ஏற்கனவே நயன்தாரா நடித்த பேய்ப்படங்களான ‘மாயா’ மற்றும் ‘டோரா’ ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றிருந்த நிலையில் தற்போது அவர் பாலிவுட் ரீமேக் பேய்ப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

கடந்த மார்ச் 2ஆம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான படம் ‘பரி’. இந்த ஹாரர் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அனுஷ்கா ஷர்மா, பரம்ப்ரதா சாட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதாபாரி சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை ப்ரோசித் ராய் இயக்கியிருந்தார்

இந்த நிலையில் இந்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். அனுஷ்கா சர்மாவின் வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் அவர் பேச்சு நடத்தி வருவதாகவும், நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த படத்தை ரீமேக் செய்ய அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது