mahanathi

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் இன்று வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது. அதிலும் சாவித்திரி கேரக்டரில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட பலரும் பாராட்டி உள்ளனர்.

இந்தபடத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், பானுப்பிரியா, மாளவிகா நாயகர், ஷாலினி பாண்டே உள்ளபட பலரும் நடித்துள்ளனர்.

சாவித்திரியின் கதையை கட்டுரையாக எழுத தொடங்கும் பத்திரிகையாளராக வருகிறார் சமந்தா. பெங்களூருவில் கோமாவில் இருக்கும் நடிகை சாவித்திரிலிருந்து கதை தொடங்குகிறது. கோமாவில் இருக்கும் பழைய நடிகையை பற்றிய செய்தியை சேகரிக்க வேண்டும் என்ற விரும்பம் இல்லாமல் இருக்கிறார் சமந்தா. ஆனால் பத்திரிகை ஆசிரியரின் உத்தரவை ஏற்று அவரை பற்றிய செய்தியை சேகரிக்க புகைப்படக்கலைஞரான விஜய் தேவர கொண்டாவடன் சாவித்திரியின் அண்ணா நகர் வீட்டுக்குச் செல்கிறார். சிறு வயதில் விதவைத் தாயுடன் தன் பெரியப்பா வீட்டில் அடைக்கலம் அடைகிறார் சாவித்திரி.

பின் விஜயவாடாவில் உள்ள கிராமத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வருகிறார். அங்கு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி பெண்ணாக வருகிறார். சின்ன வயதில் என்ன கஷ்டம் எல்லாம் படுகிறார். குழந்தை சாவித்திரியிலிருந்து ஆரம்பித்து, சினிமா வாய்ப்புக்காக அவர் எப்படி அலைந்தார். அதை தேடி எங்கெல்லாம் அலைந்தார், அதன் அவருக்கு கிடைத்த முதல் சினிமா வாய்ப்பு. பின் தேவதாஸ் படத்தில் நடித்து புகழின் உச்சியை அடைந்தார். ஜெமினியின் காதல், எல்லையில்லா புகழ் போன்றவற்றை எல்லாம் அடைந்தார்.

ஜெமினியின் துரோகம், மதுவுக்கு அடிமையாகி கிடந்தது, பின் மதுவிலிருந்து எப்படி வெளி வருவது, சொத்துக்களை இழந்து கோமாவில் விழும் வரை சாவித்திரியின் வாழ்க்கை, சொந்த வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என பத்திரிகையாளராக வரும் சமந்தா மற்றும் புகைப்பட கலைஞராக வரும் விஜய் தேவரகொண்டா இருவரின் மூலம் செவ்வனே படைத்திருக்கிறார் இயக்குனர். இறுதியில் சாவித்திரியிமிருந்து விலகி எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார் ஜெமினி கணேசன்.

Nadigaiyar Thilagam Movie HQ Stills

இந்த படத்தின் மிகப்பெரிய தூண்கள் என்றால் அது சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷூம், ஜெமினி கணேசனாக நடித்த துல்கர் சல்மான் தான் படத்திற்கு பெரிய பலம். சாவித்திரியை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் சாவித்திரி. அந்த கால கட்டத்திற்குள் நம்மை கொண்டு செல்ல வைத்துள்ளனா். கீர்த்தி சுரேசுக்கு இதுவரை நடிப்பு வராது என்று சொன்னவா்கள் எல்லாம் காதில் போட்டு கொள்ள வேண்டும். இனி அவரை வைத்து நெட்டிசன் மீம்ஸ் போட்டால் அது செல்லாமல் போய் விடும். கீர்த்திசுரேஷ் சாவித்திரியை அப்படியே பிரதிபலித்து நடித்து இருக்கிறார். சிரிப்பது, தேவதாஸ் பார்வதி, மாயா பஜார் ரங்காராவ் குறும்பு, அழுவது,மதுவுக்கு அடிமையானவள் ஜெமினியின் காதலி, மனைவி என்று சாவித்திரியாகவே இருக்கிறார்.

சாவித்திரி என்றாலே அதில் கட்டாயமாக நடிகர் திலகம் சிவாஜி பங்கும் பெரிய அளவில் இடம்பெற வேண்டும். அதுவும் பாசமலர் என்று சொன்னாலே சிவாஜி, சாவித்திரி என்று தான் உதாரணம் காட்டுவார்கள். ஆனால் சிவாஜியை முழுவதுமாக மறந்து விட்டார்கள் போல. தெலுங்கு ரசிகா்களை மட்டும் திருப்தி படுத்தவேண்டும் என்று தமிழில் சாவித்திரி நடித்த அதிக படங்களை காட்டாமல் பழிவாங்கியிருக்கிறார் போல. தெலுங்கு மக்கள் சாவித்திரியின் நடிப்பை கொண்டாடுவதற்கு முன்னே தமிழ் மக்கள் தான் அதிகமா கொண்டாடி உள்ளனா்.

காதல் மன்னன் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்த துல்கர் சல்மான் கொஞ்சம் பொருந்தாவிட்டாலும், நடிப்பில் தூள் கிளம்பி உள்ளார். ஏன் காதல் மன்னன் என்ற பட்டம் அவருக்கு கொடுத்தார்கள் என்பதை படத்தை பார்த்தாலே தெரிந்து விடும். சாவித்திரியை காதலிப்பது, தனக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை சொல்வது, ஆனால் திருமணத்திற்கு பின் ஈகோ என ஜெமினியை திரையில் கொண்டு வந்திருக்கிறார் துல்கர்.

சாவித்திரியின் பெரியப்பாவாக ராஜேந்திர பிரசாத், அதுபோல சாவித்திரியின் தோழியாக ஷாலினி பாண்டே ஜெமினியின் முதல் மனைவி அலமேலுவாக மாளவிகா நாயர், படத்தயாரிப்பாளர் சக்ரபாணி ஆக பிரகாஷ்ராஜ் எஸ்.வி.ரங்காராவ் ஆக மோகன்பாபு என ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து வடிவமைத்த விதம் செம. ஒளிப்பதிவாளர் டேனி சாலோவுக்கு ஒரு சலுயூட். அந்தஅந்த காலத்திற்கு ஏற்ப இசையமைத்த மிக்கி ஜே மேயருக்கு பாராட்டு. அதுபோல ஆடை வடிவமைப்பாளர் கௌரங், அர்ச்சனா ராவ் தான் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக திரையில் ஜொலிக்கிறார்.