கீர்த்தி சுரேஷ்,சமந்தா,துல்கர் சல்மான் நடித்துள்ள நடிகையர் திலகம் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது.

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்கியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் ஆண்டனி கேரக்டரில் 'அர்ஜூன் ரெட்டி' ஹீரோ

சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும் நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மதுரவாணி என்ற பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும், மற்றும் முக்கிய வேடத்தில் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  மூன்றே நாட்களில் ரூ.1 கோடியை தாண்டிய இரும்புத்திரை

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். தமிழில் வருகிற 11 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம், தெலுங்கில் இரண்டு நாட்கள் முன்னதாகவே, அதாவது 9 ஆம் தேதியே வெளியாகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.