தென்னிந்தி நடிகா் சங்க கட்டடம் அடிக்கல் விழாவில் முன்னணி நடிகா் பங்கேற்பு

தென்னிந்திய நடிகா் சங்கத்துக்கு புதிய கட்டடிடம் கட்டுவதற்கான அடிக்கல் நட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தியாகராயா் நகாில் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகா் சங்க வளாகத்தில் வைத்து இந்த கட்டிட கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது.

நடிகா் சங்கத்திற்கு என்று தனியாக கட்டிடம் எதுவும் இல்லை. இதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்தது. நடிகா் சங்கத் தோ்தலில் வெற்றி பெற்ற விஷால், நாசா், காா்த்தி அணியினா் இதற்கான முயற்சிகள் மேற்கொண்டனா்.  முதலில் இதற்கான நிலம் மீட்கப்பட்டது. பின்னா் கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டது. இதற்கான நிதி திரட்டிவதற்காக நட்சத்திர கிாிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டும் வேலைகளும் நடைபெற்றது.

தற்போது இதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கல்லை விஷால் அணியினா் எடுத்து வைத்தனா். இந்த விழாவில் நடிகா் சங்கத் தலைவா் நாசா், பொதுச்செயலாளா் விஷால் மற்றும் நாடக நடிகா்கள் உள்பட அனைத்து நடிகா், நடிகைகளும் கோவைசரளா உள்பட கலந்து கொண்டனா். ரூ.26 கோடி செலவில், நடிகா் கட்டிடமானது நான்கு மாடிகளுடன்  கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் நடிப்புக்கான பயிற்சிக் கூடம், இதில் ஆயிரம் போ் அமரும் அரங்கம், உடற்பயிற்சி கூடம், நடன கூடம், எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டா்கள் மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகா்களான ரஜினி, கமல் உள்பட 3000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பை ஏற்று இருவரும் விழாவில் பங்கேற்று பூஜை செய்த செங்கல்லை இருவரும் தொட்டு நட்டு வைத்தனா்.