சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய வெற்றி படமான ‘நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் ஆரம்பமானது

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையும், ஏகாம்பரம் ஒளிப்பதிவும், ஜாக்கி கலை இயக்குனராகவும், ரமேஷி படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

யுகபாரதி பாடல்கள் எழுத திலீப் சுப்புராயன் சண்டைப்பயிற்சியும், தினேஷ் நடனப்பயிற்சியும் அளிக்கின்றனர்.