நாடோடிகள் முதல் பாகம் கடந்த 2009ம் வருடம் ஜூலை மாதம் வெளியானது படத்தின் கதை நன்றாக இருந்ததால் படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் பாடல்களை சுந்தர் சி பாபு இசைத்திருந்தார் குறிப்பாக சம்போ சிவசம்போ என்ற பாடல் படத்தின் வேகத்திற்கு துணை நின்றது.

மற்றும் ஆடுங்கடா, உலகில் எந்த காதல் என்ற ஹரிகரன் பாடிய பாடல் போன்ற பாடல்களும் இனிமையாக ஒலித்தது.

இப்போது நாடோடிகள் 2 படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார் அது போல வேகமான பாடல்கள் எதுவும் இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் விரைவில் என தேதி குறிப்பிடாமல் சமுத்திரக்கனி டுவிட்டரில் அறிவித்துள்ளார்.