சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 டிரெய்லர் நாளை மறுதினம்

கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்து மிக பரபரப்பாக ஓடிய படம் சமுத்திரக்கனியின் நாடோடிகள் திரைப்படம். அதன் இரண்டாம் பாகமாக நாடோடிகள் 2 படத்தை தற்போது இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி.

முதல் படத்தில் உள்ளது போல் இது காதல் சம்பந்தமான கதையாக அல்லாமல் புரட்சிகரமான கதையாக ஏற்கனவே வெளியான டீஸரை பார்க்கும்போது தெரிகிறது.

இப்போது இப்படத்தின் முன்னோட்டமான டிரெய்லர் வெளியிடப்படுகிறது ஏ.ஆர் முருகதாஸ் வரும் 27ம்தேதி டிரெய்லரை வெளியிடுவதாக சமுத்திரக்கனி டுவிட்டரில் அறிவித்துள்ளார்.