பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா, ஆந்திராவின் பிரபல நடிகரான நாகேஸ்வரராவின் மகனாக, முன்னாள் ஹீரோயின் அமலாவின் கணவராக, நடிகை சமந்தாவின் மாமனாராக, நடிகர் நாகசைதன்யாவின் தந்தையாக இப்படி பன்முகமாக ரசிகர்களின் மனதில் நிற்பவர் நாகார்ஜூனா.

தமிழ்நாட்டில் விவேக் கலாம் பவுண்டேஷன் மூலம் நிறைய மரக்கன்றுகள் நடுதல் போல இவரும் கன்றுகள் நடுவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். அதற்கு முன்னுதாரணமாக தன் பணியாளர்களுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் ஊழியர்களுடன் இணைந்து மரம் நடுதலில் ஈடுபட்டார். இதை ஒரு பசுமை சேலஞ்சாக அனைவரும் முன் எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/iamnagarjuna/status/1024927822903562245