கங்குலியுடனான காதல் பிரேக்கப்: காரணம் கூறும் நக்மா

nagma ganguly

1990 முதல் 2000ம் கால கட்டத்தில் ரசிகா்களின் மனத்தை கொள்ளையடித்த நாயகிகளில் ஒருவா் நக்மா. இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகமாக நடித்து அறிமுகப்பட்டவர் தமிழில் முதன் முதலாக காதலன் படத்தின் வாயிலாக பிரபலமானார். பிரபுதேவா ஜோடியாக காதலன் படத்தில் நடித்து பிரபலமான நக்மா அடுத்தடுத்து ரஜினியுடன் பாட்சா, பின் கார்த்திக் உடன் மேட்டுக்குடி, பிஸ்தா, அஜித்துடன் சிட்டிசன், ஜானகி ராமன், வில்லாதி வில்லன் என பல படங்களில் நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலியுடன் ஏற்பட்ட காதல் ஏன் முறிந்தது என்பது பற்றி நடிகை நக்மா தெரிவித்துள்ளார்.

ஜோதிகாவின் அக்காவான நக்மா 2000ம் காலகட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர். என்ன காரணம் என்றால் அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலியுடன் இணைந்து பேசப்பட்டது தான். அவர்கள் இருவருக்குமிடையே உள்ள உறவு பற்றி அதிகமாக பேசப்பட காரணமாக அமைந்தது. கங்குலி மற்றும் நக்மா இருவரும் காதலித்து வருவதாக வெளிவந்த தகவல் தான் மிகவும் பரபரப்பாக இருந்தது.

nagma

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மாவும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலியும் ஒன்றாக சுற்றித்திரிந்த காரணத்தால் அவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்தி காடு தீ போல் பரவியது. இருவருக்குமிடையே காதல் மலருவதற்கும் முன்போ கங்குலிக்கு திருமணம் ஆகியிருந்தது. 1997ஆம் ஆண்டு கங்குலிக்கு திருமணம் ஆகிவிட்டது. பின் நக்மாவுக்கும் கங்குலிக்கும் காதல் ஏற்பட்டது. பின் இருவருக்குமிடையே ஏற்பட்ட காதல் முறிந்தது.

இதற்கிடையில் நக்மா கங்குலி உடன் ஏற்பட்ட காதல் முடிந்தது பற்றி கூறியதாவது, அந்த நேரத்தில் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை சரியாக அமையாததால் அவருக்கு பின்னடவு ஏற்பட்டது. இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் பேசப்பட்டது. அவர் அப்படி சரியாக விளையாடாததற்கு காரணம் என்னுடன் ஏற்பட்ட உறவு தான் காரணமாக பேசப்பட்டது. எனவே இருவரின் பழக்கம் யாருடைய வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட கூடாது என முடிவெடுத்து பிரிந்தோம். மகிழ்ச்சியுடனே உறவை முறித்துக்கொண்டோம். ஆனாலும் அவர் மீது அளப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன் என்று கூறினார்.