நடிகை நக்மா சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கும் நக்மா ரஜினியுடன் பாட்ஷா படத்தில் நடித்த நீ நடந்தால் நடை அழகு என்ற பாடலை பாடிய அவா் இது ராகுல் காந்திக்காக பாடியது என்று கூறினார்.

புதுச்சேரியில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நக்மா அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். ஆறுநாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நக்மா புதுச்சேரி வந்துள்ள நக்மா திருக்கனுரை அடுத்த சோரப்பட்டு என்ற இடத்தில் இன்று நடந்த கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

புதுச்சேரி சோரப்பட்டு என்ற கிராமத்தில் மகளிர் காங்கிரசாருக்கு நடந்த பயிற்சி முகாமில் பேசிய நக்மா, அடுத்து பிரதமாக ஆகும் தகுதி ராகுல் காந்திக்கு மட்டும் தான் இருக்கிறது என்று பேசியதோடு, அதற்காக காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அவா் நீ நடந்தால் நடை அழகு நீ சிரித்தால் சிரிப்பழகு… நீ பேசும் தமிழ் அழகு நீ ஒருவன் தானழகு என்ற பாடலை பாடி இது ரஜினிக்காக அல்ல இது ராகுல் காந்திக்காக பாடியது என்று கூறினார். தற்போது ராகுல்காந்தி தான் பாட்ஷா என்று நக்மா கூறினார்.