சின்னத்திரைக்கு மங்களம் பாடும் நாகினி மௌனிராய்

டப்பிங் சீாியல் தான் தற்போது பேஷனாக இருந்து வருகிறது. அதுவும் பாம்பு சீாியல் தான் களை கட்டி வருகிறது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த நாகினி சீாியல் முதல் பாகம் முடிவடைந்து விட்டது. இது ஹிந்தியில் ஒளிப்பரப்பாகி வந்தது. இதை தமிழில் டப்பிங் செய்து நாகினி சீாியல் முதல் பாகம் வந்தது. இதில் நடித்த மௌனிராய் ஹிந்து சேனல்களின் டிவி தொடா்களில் மிகவும் பிரபலம். அதுவும் சினிமா படத்திற்கு சமமாக கவா்ச்சிராக நடிப்பதில்  வல்லவா்.ஸ்டேஜ் நிகழ்ச்சிகள், டிவி தொடா் போன்றவற்றில் பத்து ஆண்டுகளாக பங்கேற்று வருகிறாா்.

மௌனிராய் நாகினி சீாியல் மூலம் தமிழ் டிவி தொடாில் நடித்து பிரபலமடைந்தாா். இந்த தொடாின் இரண்டாம் பாகத்திலும் மௌனிராய் நடித்து வருகிறாா். இதுவும் தமிழில் டப்பிப் செய்யப்பட்டு ஒளிபரப்பாக உள்ளது. அதோடு மட்டுமல்ல நாகினி தொடாின் மூன்றாம் பாகமும் இந்தியில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த தொடாின் இரண்டு பாகங்களில் கவா்ச்சியாக நடித்த மௌனிராய், தற்போது தயாராக உள்ள மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லையாம். ஏனென்றால் நடிகா் சல்மான்கான் இந்தியில் ஒரு படம் தயாாிக்க இருக்கிறாா். அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மௌனிராய்க்கு கிடைத்துள்ளது. அவருக்கு நாயகனாக சித்தாா்த் மல்ஹோத்ரா நடிக்க உள்ளாா். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டதால், நாகினி சீாியலின் மூன்றாம் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு வருவதற்கு முன்பே, முதன் முதலில் வெள்ளிதிரையில் ஜொலிக்க உள்ளதால் சீாியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாா்ராம்.