ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திராவை 2014ம் ஆண்டு பிரித்து தெலுங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களை உருவாக்கினார்கள்.மொத்த தொழில் நிறுவனங்களும் தலைநகரான ஐதராபாத்தை மையமாக கொண்டு செயல்படுகிறது.

இந்த தலைநகரம் தெலுங்கானாவுக்கு போய்விட்டது. இப்போது ஆந்திராவுக்கு அமராவதியை உருவாக்கி வருகிறார் சந்திரபாபு நாயுடு. மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் வாக்குறுதி படி செயல்பட மத்திய அரசு மறுத்து விட்டது.

சிறப்பு அந்தஸ்துக்கு மத்திய அரசு மறுப்பு

இதற்கிடையே ஆந்திராவில் தொழிற்சாலைகளை கொண்டுவரவேண்டும் என்றால் வரி விலக்கு வேண்டும். ஆனால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் ஆநதிராவில் பெரிய அளவில் தொழில் நிறுவனங்களை கொண்டுவர சந்திரபாபு நாயுடுவால் முடியவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  ஹிந்தி மொழி திணிப்பு ; இதுதான் தமிழ் குசும்பு - மூடர் கூடம் நவின் டிவிட்

கூட்டணியில் இருந்து விலகல்

4 வருடங்களுக்கு மேல் பாஜக கூட்டணியில் இருந்து போராடிய சந்திரபாபு நாயுடு, இனியும் காத்திருக்க முடியாது என பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். ஆந்திராவின் ஒட்டுமொத்த மக்களுமே தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணருவதாக அப்போது சந்திரபாபு வேதனை தெரிவித்தார்.

அதன் பிறகு பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டங்களில் இறங்கினார் சந்திரபாபு நாயுடு. இந்த நிலையில் வருகிற 6-ந்தேதி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.

அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  என்.டி.ராமாராவ் மனைவி செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறார் - உதவியாளர் பகீர் புகார்

மோடியை சார் என்று அழைத்தேன்

இது தொடர்பாக சந்திரபாபு நாயடு அனந்தபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசுகையில். ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து பெற பிரதமர் மோடியை 29 முறை சந்தித்து பேசினேன். ஆனால் சிறப்பு அந்தஸ்து தரவில்லை. குஜராத்தை விட ஆந்திரா முன்னேறி விடக்கூடாது என்று நினைக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை சந்தித்த போது கூட அவரை பெயரை சொல்லி தான் அழைத்தேன். ஆனால் பிரதமர் மோடியை மாநில சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மிக மரியாதையாக சார் என்று அழைத்தேன். ஆனால் அவர் சிறப்பு அந்தஸ்து தராமல் ஏமாற்றி விட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  உயிர் பிச்சை கேட்கிறேன் - மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை கதறல்

பழி வாங்குகிறார் மோடி

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பழி வாங்கப்படுகிறார்கள். அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற சோதனைகள் தொடுக்கப்படுகின்றன.

இது எனது கட்சிக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல. ஆந்திர மக்கள் மீது மோடி நடத்தும் தாக்குதல்.

ஏன் வருகிறார் மோடி

ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வருகிறார்.

அவரது வருகையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பொதுமக்களும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் போராட்டம், எதிர்ப்பு பேரணி ஆகியவற்றை நடத்த வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.