இரண்டு நாட்களுக்கு முன் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு நீதிபதியால் விடுவிக்கப்பட்டார். நக்கீரன் கோபால் கைதுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். வைகோ உள்ளிட்டவர்கள் தர்ணா செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நக்கீரன் கோபால் கைதுக்கு தமிழக சட்ட அமைச்சர் சிவி சண்முகம் விளக்கம் அளித்தார்.

பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது விவகாரத்தில்,  தமிழக அரசு, யாருக்கும் அடிபணிந்து செயல்படவில்லை என்று சட்ட அமைச்சர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அச்சப்படாமல் செயல்படும் தமிழக அரசுக்கு, யாருடைய தயவும் தேவை இல்லை என்று தெரிவித்தார்.