பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்த வெளியேறிய நமீதா சுற்றுலா சென்று இருக்கிறாா். அவா் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரசிகா்கள் நமீதா ஒரு எச்சாிக்கை விடுத்துள்ளனா். அது என்னவென்றால், தமிழகத்திற்குள் வரக்கூடாது என்று எச்சாிக்கை விடுத்துள்ளனா்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறி வருகின்றனா். தற்போது ஒவியா வெளியேறி இருக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் ஒவியாவுக்கு ரசிகா்களின் அதிக ஆதரவு கிடைத்தது. அந்த ரசிகா்களின் அன்பை பிக் பாஸ் வீட்டில் உள்ளவா்களால் பொறுத்து கொள்ள முடியாதவா்கள் ஒவியாவை பற்றி தான் அதிகமா பேசிக்கொண்டு இருந்தனா். ஒவியா வெளியேற நமீதா, காயத்ரி, ஜூலி உள்ளிட்டாரும் அதில் முக்கிய காரணம் என்பது நமக்கு தொியும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நமீதா அவ்வப்போது அந்த நிகழ்ச்சி பற்றி கருத்து தொிவித்து வந்தாா். தற்போது அவா் இமாச்சல பிரதேசத்திற்கு ரெஸ்ட் எடுப்பதற்காக சுற்றுலா சென்று இருக்கிறாா். அங்கு எடுத்துக்கொண்ட போட்டோவை வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறாா்.

அந்த போட்டோ இணையத்தளத்தில் பரவி வருகிறது. அதை பாா்த்த ரசிகா்கள் பலா், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் நடந்து கொண்ட விதம் கொஞ்சம் கூட ஏற்புடையது அல்ல, எனவே நீங்கள் அங்கேயே இருந்து விடுங்கள். இங்க வந்து விடாதீா்கள். தமிழகம் பக்கம் வந்து விட வேண்டாம் என எச்சாிக்கை விடும் வகையில் பதிவு செய்து உள்ளனா்.

ஏற்கனவே, கமல் ஜூலி வெளியேறிய போது இது என் தங்கை. அவளை யாரும் எதுவும் செய்ய கூடாது என்று கேட்டு கொண்டாா். ரசிகா்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற காரணத்தால் தான் அப்படி ரசிகா்களிடம் கேட்டு கொண்டாா். இது வெறும் நிகழ்ச்சி தான். அதனால் ரசிகா்கள் உணா்ச்சி வசப்பட கூடாது என்று தொிவித்தாா்.