கைப்பிடித்து பலன்கள் சொல்லும் நமீதா???

08:24 மணி

தமிழில் எங்கள் அண்ணா படம் மூலம் அறிமுகம் ஆனவர் நமீதா. ஏய், இங்கிலிஷ் காரன், விஜயுடன் அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் உடலில் கவனம் கொள்ளாததால் உடல் எடை அதிகமாகி நடிப்பை விட்டு விலகி இருந்தார். தற்போது தமிழ், மலையாளம் என மறுபடியும் நடிப்பில் பிசியாகி உள்ளார்.

நடிப்பை தவிர்த்து அவருடைய வாழ்க்கையை பற்றி கேட்ட போது, அவர் கூறியதாவது, நடிப்பை தவிர்த்து மலை ஏறுவது எனக்கு பிடிக்கும். இது போன்ற பயணங்கள் மனதை உறுதிபடுத்துகிறது. கடந்த 3 வருடங்களாக கல்வி, குழந்தைகள், பெண்கள் என அனைத்து துறைகளை பற்றி கவிதைகள் எழுதுகிறேன். இதை என் உதவியாளர் ஒரு புத்தகமாக வெளியீட ஆலோசனை கூறியிருக்கிறார்.இதை பற்றி விரைவில் முடிவு செய்வேன்.

மேலும் ஆன்மிகம் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்துகிறேன். என்னைச் சந்திக்கும் நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து, அவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு, சில நிமிடங்கள் தியானம் செய்வேன். அப்போது எனக்குள் தோன்றும் விஷயங்களை அவரிடம் சொல்வேன்.ஆனால் இது ஜோதிடம் அல்ல. நான் சொல்வது இனி அவரது வாழ்க்கையில் நடக்கும் என்று ஓரளவு உறுதி செய்வேன்”. என கூறுகிறார்.

(Visited 28 times, 1 visits today)
The following two tabs change content below.
மோகன ப்ரியா
இவர் 2 ஆண்டுகளாக சினிமா தளத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பொழுதுபோக்கு செய்திகள் தருவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு பதிவுகளை உடனுக்குடன் செய்திகளாக உருவாக்கி தளத்தில் பதிவிட்டு வருகிறார். நகைச்சுவையான மீம்ஸ்கள் உள்ளிட்ட சில பிரிவுகளை இவர் கவனித்துவருகிறார். தொடர்புகொள்ள- moghnaselvaraj@gmail.com