சன் தொலைக்காட்சியில் திங்கள்-சனி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நந்தினி தொடர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடரை சினிமா இயக்குனர் ராஜ்கபூர் இயக்கி வருகிறார். மேலும், திரைப்பட இயக்குனர் சுந்தர் சி. இதன் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், கன்னடத்தில் நேரிடையாக எடுக்கப்படும் இந்த தொடர் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

தாலாட்டு கேட்குதம்மா, சின்ன ஜமீன், சீமான், வள்ளல், அவள் வருவாளா உள்ளிட்ட 20 படங்களை இயக்கிய ராஜ்கபூர், இந்த தொடரை இயக்குவது பற்றி கூறியபோது “நான் பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்துள்ளேன். ஆனால், நந்தினி தொடர் உங்களுக்கு ஒரு சினிமா பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். இந்த தொடரில் பணியாற்றும் அனைவரும் திரைப்பட துறையை சேர்ந்தவர்கள்தான். ஒரு பாம்பிற்கும், பேய்க்கும் இடையில் நடக்கும் ஒரு சண்டைதான் இந்த தொடரின் கதையாகும்” எனக் கூறியுள்ளார்.