எனது மூன்று குழந்தைகளுக்காகவே வாழ்கிறேன்-நந்தினி உருக்கம்

விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர்  நந்தினி.  இவரது கணவர் கார்த்திகேயன் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் எனது மரணத்திற்கு நந்தினியின் அப்பாதான் காரணம் என்று எழுதியிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.  இதையடுத்து நந்தினி மற்றும் அவரது தந்தையை  போலீஸார் விசாரணை நடத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் கூறியபோது,  எனது கணவர் மரணம் என்னை மிகவும் பாதித்துள்ளது. எனது கணவரின் முகத்தைக்கூட பார்க்கவிட வில்லை. சுடுகாட்டில்தான் அவரது முகத்தை பார்த்தேன். எதற்காக என்னையும் எனது குடும்பத்தினரின் மீதும் வீண்பழியை சுமத்துகிறார்கள் என்றே தெரியவில்லை. என்னுடைய அப்பா,அம்மா மற்றும் தம்பி ஆகிய மூன்றுபேரும் எனக்கு குழந்தைகள். அந்த குழந்தைகளுக்காக நான் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது. மீடியாவில் பணியாற்றுவதால் எனது சோகத்தை மறைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.