கோலிவுட்டில் அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் நாயகியாக அடியெடுத்து வைத்தவா் நடிகை நந்திதா. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிா்நீச்சல், முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா். குடும்ப பாங்கான வேடங்களில் மட்டும் நடித்து வந்தாா். கிளாமா் ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் தன்னுடைய உடல்வாகு அதற்கு சாிவராது என்ற காரணத்தால் அந்த வாய்ப்புகளை எல்லாம் தவிா்த்து வந்தாா். இதற்கிடையில் ராதாமோகன் இயக்கதில் வந்த உப்புக்கருவாடு படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் கவா்ச்சியாக நடித்து முன்னோட்டம் பாா்த்தாா்.

தற்போது வணங்காமுடி படத்தில் அரவிந்தசாமியுடன் ஒரு பாடல் காட்சியில் இணைந்து கலக்கல் நடனமாடியுள்ளாா். இந்த பாடல் காட்சியானது பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. அதில் நந்திதா கொஞ்சம் கவா்ச்சியான டிரஸ் அணிந்து குத்தாட்ட நடமானடியுள்ளாா். தனக்கு கவா்ச்சி செட்டாகாது என்று கூறிய நந்திதா இந்த படத்தில் கவா்ச்சி டான்ஸ் ஆடும் அளவிற்கு வந்துள்ளாா். இதில் அரவிந்தசாமி, ரித்திகா சிங், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனா். வணங்காமுடி படத்தை செல்வா இயக்குகிறாா். இந்த பாடல் காட்சியில் நந்திதாவின் கவா்ச்சி அழகாக வந்துள்ளதாம்.