Nandita’s Prema Katha Chitram 2 : தெலுங்கில் 2013-ஆம் ஆண்டு ரிலீஸாகி ஹிட்டான படம் ‘பிரேமக்கதா சித்ரம்’. தற்போது, இதன் இரண்டாம் பாகம் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது.

இதில் நந்திதா பேயாக நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சுமந்த் அஸ்வின், சித்தி இத்னானி நடித்துள்ளனர். இந்த படத்தை ஹரி கிஷன் இயக்கியுள்ளார்.

இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.