செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17

ஆர்மி ஆபிசராகிறார் நானி

08:32 காலை

Loading...

நான் ஈ, வெப்பம், ஆஹா கல்யாணம் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நானி.

இவர் தெலுங்குத் திரையுலகில் வெற்றி நடிகராக வலம் வருகிறார். இந்த ஆண்டு ‘நே’னு லோக்கல்; மற்றும் ‘நின்னு கோரி’ என்று இவர் நடித்த இரண்டு படங்கள் அடுத்தத்தடுத்து வெற்றி படங்களாக வசூலைக் குவித்துள்ளது. இதை அடுத்து இவருக்குப் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.  நானி அடுத்து ஹனு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தில் இவர் இராணுவத்தில் பணிபுரிபவராக நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதுவரை சாக்லேட் பாயாக வளம் வந்த நானியை இதில் முற்றிலும் மாறுபட்ட இராணுவ அதிகாரியாகப் பார்க்கலாம். தற்போது இவர் “எம்எல்ஏ” என்ற தெலுங்கில் வெளிவரவுள்ள நகைச்சுவைப் படத்தில் நடிக்கிறார்.

(Visited 14 times, 1 visits today)
The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com