நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் நேற்று ராஜினாமா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் சங்க செயலாளர் விஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்புதெரிவித்து பொன்வண்ணன் ராஜினாமா செய்ததை அடுத்து நடிகர்சங்க தலைவர் நாசர் ஒரு அவசர அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் சங்க செயலாளர் விஷாலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சங்கத்தின் அவசர அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கையெழுத்திட்ட இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று 11.12.2017 நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு.

உபதலைவர் திரு. பொன்வண்ணன் அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் பற்றி இந்த சிறப்பு செயற்குழுவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அவருடைய உணர்வுகளை மதிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்து அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமும் கொடுக்கிறது. ..

பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் தம்முடைய நிலைப்பாட்டை விளக்கியும் சங்கத்தின் சட்ட விதிகளுக்கு புறம்பாக எதையும் தான் செய்யவில்லையென்றும் இம்மாதிரி சங்கடங்கள் உருவாகும் சூழலை தான் உட்பட சங்கத்தில் எவரும் உண்டாக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது