சசிகுமார் நடிப்பில் நாடோடிகள் திரைப்படமானது 2009ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியாகி சூப்பா் டுப்பா் ஹிட் அடித்ததோடு அல்லாமல் வசூலிலும் சாதனையை படைத்தது.

தற்போது இயக்குநா் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனி நாடோடிகள் பார்ட் எடுக்க போகிறார் என்ற செய்தி கசிந்துள்ளது. இந்த நாடோடிகள் 2 படத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி, எம்.எஸ். பாஸ்கா், நமோ நாராயணன், ஞான சம்பந்தம், சூப்பா் சுப்புராயன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் போட்டோ ஷீட் திருவள்ளூ அருகே 20.08.18 அன்று நடைபெறுகிறது. இந்த படத்திற்கு நடனம் தினேஷ், பாடலாசிரியா் யுகபாரதி, சண்டை பயிற்சி திலீப் சுப்புராயன் மேலும் மற்ற நடிகா், நடிகைகள் தோ்வு நடைபெறுகிறது.

நாடோடிகள் படத்தின் வெற்றியை அடுத்து இந்த தொடா்ச்சியாக இதன் இரண்டாம் பாகத்தை மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்று வட்டார பகுதிகளில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.