தென்னிந்திய நடிகர் சங்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் மவுன பேராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ரஜினி, கமல் அனைவரும் கலந்து கொண்டனர். திரைத்துறையினர் அனைவரும் கையெழுத்திட்ட மனுவை தமிழக ஆளுநர் வசம் திரையுலத்தை சேர்ந்தவா்கள் அளித்தனா். இன்னும் 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்தார் என நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி முதல்வரும், துணை முதல்வரும் இரு தினங்களுக்கு முன்பு ஆளுநரை சந்தித்தனர். அதுபோல செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இன்று ஆளுநரை நடிகர் சங்கத்தினர் சந்தித்தனர். ஆளுநரை பார்த்து விட்டு நடிகர் சங்க தலைவர் நாசர் இது பற்றி கூறியதாவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திரையுலகினர் கடந்த 8ம் தேதி அறவழியில் நடந்த மவுன போராட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். ரஜினி, கமல்,விஜய், தனுஷ், சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த மவுன போராட்டத்தில் 5000 பேர் பங்கேற்றனர். அவா்கள் கையெழுத்திட்ட மனுவை ஆளுநரிடம் நாசர், பொன்வண்ணன், ஆர.கே.செல்வமணி, விக்ரமன் உள்ளிட்ட திரையுலத்தை சேர்ந்தவா்கள் அளித்னர்.

நாங்கள் அளித்த மனுவின் குறிப்பை முதல்வருக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று ஆளுநர் கூறியதை நாசர் தெரிவித்துள்ளார். நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கை இருக்கிறது என்று நாசர் கூறினார்.