நடிகர் சங்கத்தின் மலேசியா நட்சத்திர கலைவிழா தேதி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கு நிதி திரட்ட பல்வேறு வழிகளில் நிதிதிரட்டும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் ஜனவரியில் மலேசியாவில் பிரமாண்டமான நட்சத்திர கலைவிழா நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டுருந்தது தெரிந்ததே. இந்த விழாவில் ரஜினி, கமல், விஜய் உள்பட கோலிவுட் திரையுலகமே திரண்டு கலைவிழாவை சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த நட்சத்திர கலைவிழா நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த தகவலை நடிகரும் நடிகர் சங்க செயலாளருமான விஷால் அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் உள்ள Bukit Jalil என்ற இடத்தில் நடைபெறவுள்ளதாக விஷால் அறிவித்துள்ளார்.

இந்த நட்சத்திர கலைவிழாவில் கிடைக்கும் வருமானம், தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிகிறது.