ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் அவருக்கு நல்லதொரு பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல தீனியாக அமைந்துள்ளது. இது தான் அவருக்கு முதல் படமாக சொல்லும்படியாக நடிப்பில் அசத்தியிருக்கிறார். பாலா படத்தில் நடித்தால் நடிப்பு தெரியாதவருக்கு கூட நடிப்பை வரவழைத்து விடுவார். சொல்லப்போனால் இந்த படத்திற்காக ஜி.வி.பிரகாசுக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  'கத்தி' போல் டபுள் ஆக்சன்: தொடக்க விழாவில் கசிந்த தகவல்

முன்னணி நடிகரான தளபதி விஜய் என்றாலே பிடிக்காதவா்கள் இருக்க முடியுமா. இவருக்கு என்று ஒரு ரசிகபட்டாளமே இருக்கிறது. ரசிகா்கள் மட்டுமில்லாது திரையுலகத்தை சோ்ந்த பிரபலங்களும் இவருக்கு ரசிகா்களாக இருக்கிறார்கள். இளம் நடிகரும், இசையமைப்பாளமான ஜி.வி.யும் கூட தளபதி ரசிகா் தான்.

இதையும் படிங்க பாஸ்-  உலகளவில் யூடியூப்பில் டிரெண்டாகும் விஜய்யின் 'சர்கார்' டீசர்

ஜோதிகா, இவானா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் படத்தில் ஜி.வி தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இவரது நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தால் அதை விஜய் அண்ணாவிற்கு தான் அா்ப்பணிப்பேன் என ஜி.வி கூறியுள்ளார்.