Hip Hop Tamizha’s Natpe Thunai : ‘மீசைய முறுக்கு’ படத்துக்கு பிறகு ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடித்துள்ள ‘நட்பே துணை’ படத்தை பார்த்திபன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஆதிக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார்.

பிரபல இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழாவே இசையமைத்துள்ளார். சமீபத்தில், வெளியிடப்பட்ட 3 பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, படத்தில் இடம்பெறும் ‘பள்ளிக்கூடம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.