தென்னிந்திய திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘பாரீஸ் பாரீஸ் என்ற ஒரே ஒரு தமிழ்ப்படத்திலும், முன்னணி நடிகர்களுடன் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இதுவரை காதல் கிசுகிசுவில் சிக்காத காஜல் அகர்வால் தன்னிடம் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் இரண்டு முறை காதலை கூறியதாகவும், ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாகவும் கூறினார். அந்த நடிகர் நவ்தீப். இவர் அறிந்தும் அறியாமலும், இது என்ன மாயம் உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காஜல் அகர்வால் தெலுங்கு நடிகர்கள் குறித்து கூறியப்போது மகேஷ்பாபு மிகவும் அமைதியானவர் என்றும் ஆனால் அவர் ஜோக் அடித்தால் வயிறு புண்ணாகி விடும் என்றும் தெரிவித்தார்.

அல்லு அர்ஜுன் உடை அணிவதில் புதுமுறையை கடைபிடிப்பார் என்றும் ஹீரோக்களிலேயே சிரஞ்சீவி தான் ரொமான்டிக் ஆனவர்” என்றும் காஜல் கூறியுள்ளார்.