இளம்பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்த காவலாளி மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவிமும்பை தாலோஜா எம்.ஐ.டி.சி கெமிக்கல் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஹரிநாராயண் குப்தா (25). கடந்த 12ம் தேதி காலை ஊழியர்கள் பணிக்கு வந்த போது குப்தா அவரின் அறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  3 மாத ஆண் குழந்தையை கொலை செய்த தந்தை - ஏன் தெரியுமா?

போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, 11ம் தேதி இரவு வெளியிலிருந்து நிறுவனத்திற்குள் யாரும் உள்ளே வரவில்லை. அதேபோல், வெளியேறவும் இல்லை. எனவே, அன்று இரவு பணியில் இருந்த மற்றொரு காவலாளி லோலராக்நாத் குப்தா(46) மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  அண்ணன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்: கொலையில் முடிந்த விபரீதம்!

போலீசாரின் தீவிர விசாரணையில், ஹரிநாராயணை கொலை செய்தது நான்தான் என அவர் ஒப்புக்கொண்டார். பெண்கள் மீது அதிக மோகம் கொண்ட ஹரி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை மயக்கி, தனது அறைக்கு அழைத்து சென்று அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதை லோலராக்நாத் கண்டித்துள்ளார். ஆனாலும், ஹரி திருந்தவில்லை. எனவே, 11ம் தேதி இரவு அவர் தூங்கிக்கொண்டிருந்த போது அவரின் தலையில் இரும்பு தடியால் லோலராக்நாத் அடித்துள்ளார். இதில், ஹரி ரத்தவெள்ளத்தில் மயங்க, அவரின் மர்ம உறுப்பை கத்தியால் அறுத்துள்ளார். இதில் அவர் ஹரி பலியானது தெரியவந்துள்ளது.