சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நயன்தாரா-த்ரிஷா

கோலிவுட் திரையுலகில் பத்தே பத்து படங்கள் மட்டும் நடித்த ஒரு நடிகர் நம்பர் ஒன் இடத்தை நெருங்கிவிட்டார் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். அவருடன் நடிக்க ஆரம்பகாலத்தில் பிரபல நடிகைகள் தயங்கிய நிலையில் இன்று நயன்தாராவும் த்ரிஷாவும் நடிக்க முன்வந்திருப்பது அவரது வளர்ச்சியை காட்டுகிறது

இந்த நிலையில் ‘வேலைக்காரன், ‘பொன்ராம் இயக்கும் படம்’ ஆகிய படங்களை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகிகளாக நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா நடிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிகிறது.