இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை எடுத்தார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தார் இந்த படம் நல்ல வரவேற்பைபெற்றது. ஆனால் இந்த படம் எடுத்த விக்னேஷ் சிவனுக்கும் படத்தின் நாயகி நயன்தாராவுக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது.

இதையும் படிங்க பாஸ்-  திருமணமான 2 வாரத்தில் மாணவருடன் கல்லூரி ஆசிரியை ஓட்டம்...

இவர்களுடைய காதல் பற்றி பலமுறை பல செய்திகள் உலா வந்தது. ஆனால் இருவரும் இதனை ஏற்றுக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை. அமைதியாக அனைத்தையும் ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியானால் போதும் அது உடனே வைரலாகி விடும். காரணம் நடிகை நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  பல நடிகைகளின் லீலைகளை அம்பலப்படுத்துவேன் - பாடகி சுசித்ரா அதிரடி?

இந்நிலையில் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். நடிகை நயந்தாராவுக்கு இரண்டு விஜய் விருதுகள் கிடைத்ததை பாராட்டும் விதமாக புகைப்படம் எடுத்து அதனை தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். மேலும் அதில், பிளாக் அன்ட் வைட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுமே என நானும் ரவுடி தான் படப்பாடல் வரியை சேர்த்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.