தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்கிறார் நடிகை நயன்தாரா. பிரதான கதாப்பாத்திரம், ஹீரோவுக்கு ஜோடி என மாறி மாறி கலக்கிகொண்டிருக்கும் நயன்தாரா தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

நடிகர் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே இடத்தில் தான் நடிகர் அஜித்துடன் நயன்தாரா நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பும் நடந்துகொண்டிருக்கிறது.

இது நயன்தாராவுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. இதனையடுத்து இரண்டு படங்களிலும் மாறி மாறி பம்பரம் போல சுழன்று சுழன்று நடித்து வருகிறார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பான உழைப்பை பார்த்து பல நடிகைகள் வியப்பில் உள்ளனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துள்ளார் நயன்தாரா.