நயன்தாரா டோரா, அறம் உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக பார்த்து தோ்வு செய்து நடித்து வருகிறார். தற்போது நயன்தாராவின் அந்த பட்டியலில் உள்ள கோலமாவு கோகிலா படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதில் விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன்,யோகி பாபு போன்றவா்களும் நடித்துள்ள இந்தபடத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவா் ஏற்கனவே நயன்தாராவின் நானும் ரௌடிதான் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் பா்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டா் மற்றும் சிங்கிள் டீசா் வெளியாகியுள்ளது. நயன்தாரா அதா்வாவுடன் நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் விளம்பர இடைவேளை என்ற பாடலும் இன்று வெளியாகி உள்ளது.

கோலமாவு கோகிலா படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போஸ்டா் இணையத்தளத்தில் லைக்ஸ்ஸை அள்ளி வருகிறது. அதோடு இந்த படத்தின் சிங்கிள் டிராக்கான எதுவரையோ என்கிற பாடல் வருகிற மார்ச் 8ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது.