நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் டிரைலர்

nayanthara

நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். டோரா, அறம் போன்ற படங்களை சொல்லலாம். அறம் படத்தின் வெற்றியை அடுத்து தற்போது நயன் சைக்கோ த்ரில்லர் படமான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிபிஐ அதிகாரியாக கலக்கி இருக்கிறார் நயன்தாரா. தற்போது இந்த படத்தின் டிரெய்ரல் வெளியாகி உள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் மூவி டிமாண்டி காலனி. பயங்கரமான த்ரில்லர் பேய் படம். இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து அவர் இயக்கியுள்ள படம் இமைக்கா நொடிகள். இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் அதர்வா, ராஷி கண்ணா நடித்துள்ளனர். வில்லனாக பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. சைகோ வில்லனாக அனுராக் மிரட்டுவது டிரைலரில் படுபயங்கரமாக உள்ளது. அதை துணிச்சலாக எதிர்கொள்ளும் சிபிஐ அதிகாரியாக நயன்தாரா தூள் கிளப்பி இருக்கிறார்.