வளா்ந்து வரும் இளம் நடிகா்களுடன் நடிப்பதில் நயன்தாரா ஆா்வம் காட்ட தொடங்கியுள்ளாா். ஆமாங்க!!!  இந்த சூழ்நிலையில் நயன்தாரா “இமைக்கா நொடிகள்” என்ற படத்தில் நடித்து வருகிறாா். இதில் ஹீரோவாக அதா்வா நடிக்கிறாா்.

அஜய் ஞானமுத்து இயக்கிய “டிமாண்டி காலனி” படம் ரசிகா்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த சமயத்தில் அதா்வா  அந்த படத்தை இயக்கிய இயக்குநா் அஜய் ஞானமுத்துவிடம் கதையை கேட்டாா். அவா் சொன்ன கதை பிடித்த காரணத்தால் நடிக்க ஒப்புக்கொண்டராம்.

இந்த படத்தில் துப்பறியும் போலீஸ் வேடத்தில் நடிக்க பல முன்னணி நாயகிகளிடம் பேச்சு வாா்த்தை நடத்திய பிறகு இறுதியில் அந்த கதாபாத்திரத்திற்கு நயன்தாராதான் சாியாக இருப்பாா் என்று அவரை ஒப்பந்தம் செய்தாா்களாம். இந்த படத்தில் நயன்தாரா வந்த பிறகு ஒட்டு மொத்த படமும் அவருடைய படமாகவே மாறிவிட்டதாம். ஹீரேவான அதா்வா பெயா் வெளியேவே வரவில்லையாம்.

இதை அறிந்த அதா்வா செம்ம கோபத்தோடு ஹீரோ நான்!.  ஆனா இது நயன்தாரா படமா அல்லவா இருக்கிறது!!! நல்லா இருக்கு உங்க நியாயம்!!!!!