‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் நடிப்பு அபாரமாக இருந்ததாகப் பாராட்டியுள்ளார் இளம் நாயகி மஞ்சிமா மோகன். இப்படி ஓர் அருமையான வெற்றிப்படத்தைத் தந்துள்ள இயக்குநர் நெல்சனையும் அவர் பாராட்டியுள்ளார். “படம் முழுவதும் நான் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

சில இடங்களில் அழ நேர்ந்தது. சில காட்சிகள் என்னை சிலிர்க்க வைத்தன. இதுபோன்ற மேலும் பல படங்களை இயக்குநர் நெல்சன் தருவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.