தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையொட்டி இருவரும் ஜோடியாக அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

அப்போது, இவர்களுடைய இந்த கோவில் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனிடையே, இருவரும் ‘பேக் மேன் ஸ்மாஸ்’ எனப்படும் ஏர் ஹாக்கி விளையாடியுள்ளனர். இந்த விடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

போட்டி துவங்கியது முதலே நயன்தாரா முன்னிலையில் இருந்தார். இவர் 1,050 பாய்ண்ட்கள் பெற்று விக்னேஷ் சிவனை தோற்கடித்தார்.

இதையடுத்து, வெற்றி பெற்ற உற்சாகத்தில் நயன்தாரா துள்ளிகுதித்தார். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/BoDs0JFjnTo/?utm_source=ig_web_copy_link