நடிகை நயன்தாரா தன்னுடைய காதலனும், இயக்குனருமான விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

பிரபுதேவை விட்டு பிரிந்த நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டார். அதன் பின் அவர்கள் இருவரும் காதலர்களாகவே வலம் வந்தனர்.

இந்நிலையில், விக்கேஷ் சிவனுக்கு இன்று பிறந்த நாள். இதை முன்னிட்டு காதலனுடன் அமெரிக்கா பறந்த நயன்தாரா, அங்கு அவரின் பிறந்த நாளை கொண்டாடினர். புகழ்பெற்ற புரோக்ளின் பாலத்தில் பாலத்தில் விக்னேஷுடன் எடுத்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

நன்றாக உற்றுப்பார்த்தால் அந்த இடம் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் நடிகர் சிம்பு, திரிஷாவை சில வருடங்களுக்கு பின்பு சந்திக்கும் இடம் அது என்பது நம்மில் பலருக்கும் நினைவில் வரும்…