கடவுளின் சொந்த நாடு என போற்றப்படும் கேரளாவை மழை வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது. வீடுகளை இழந்து அத்யாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இருந்தாலும் மழை நின்றபாடில்லை.

மத்திய அரசு, அண்டை மாநிலங்கள் என அனைவரது உதவியையும் எதிர்பார்த்து நிற்கிறது கேரள அரசு. மீட்பு பணிகளில் 24 மணி நேரமும் தீவிரமாக உள்ளது ராணுவம். கேரளாவின் வெள்ளபாதிப்பிற்கு அனைத்து தரப்பினரும் தானாக முன்வந்து உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  ஸ்டிரைக்க உடைக்க நயன்தாரா பயன்படுத்தப்படுகிறாரா?

பல்வேறு தரப்பு மக்கள், பிரபலங்கள், அரசியல் கட்சிகள், மத்திய அரசு, பிற மாநிலங்கள் என நிதியுதவு கேரளாவுக்கு வருகின்றன. இந்நிலையில் நடிகை நயன்தாராவும் தனது பூர்வீக மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவர் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினி, கமல், அஜித், மம்முட்டி படங்களின் ஹீரோயின் ஆகும் நயன்தாரா

கேரள வெள்ள பாதிப்புக்கு தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், சூர்யா, கார்த்தி, கமல்ஹாசன், விஜய் சேதுபதி, தனுஷ், விஷால், சிவகார்க்திகேயன் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்கள் கேரளாவிற்கு நிதி உதவி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட பிரபல நடிகை நயன்தாரா வெள்ள பாதிப்பிற்கு ரூ.10 லட்சத்தை நிதி உதவியாக வழங்கியுள்ளார். வரலாறு காணாத இயற்கை சீற்றத்தால் கேரளா நிலைகுலைந்துள்ளது. மொத்தம் 14 மாவட்டங்களை கொண்ட கேரளாவில் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கும் அளவுக்கு அங்கு தீவிரமாக மழை பெய்து வருகிறது.