தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவருக்கு ஒரு பழக்கம் உண்டு தான் நடிக்கும் எந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சிக்கு வருவதில்லை என்பதுதான் அது. விஜயுடன் நடித்தாலும் சரி, வேறு எவருடன்  நடித்தாலும் சரி இந்த கொள்கையைவிட்டு வர மாட்டார் அவர். ஆனால் சமீபத்தில் அறம் படத்திற்காக சன் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கு கொண்டார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு மாற்றம் அவருக்கு வர காரணம் என்ன என்று திரையுலகினர் பலரும் ஆச்சரியப்பட்டனர்.

அறம் படம் கத்தி படத்தின் கதை விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோபி முதன்முறையாக இயக்கும் படம். இந்த படத்தினை தயாரிப்பவர் கோட்டப்பாடி ஜெ.ராஜேஷ் வேறு யாருமில்லை. நயன்தாராவின் மானேஜர்.  திரையுலகில் இன்னொரு பேச்சும் உண்டு. மேனேஜர் பெயரில்  நயன்தாரா இந்த படத்தை தயாரித்து வருகிறார் என்றும் கூரப்படுகிறது.

இப்பொழுது புரிகிறதா? நயன்தாரா அறம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மர்மம்