நயன்தாராவின் ‘இமைக்கா நொடிகள்’ மிரட்டும் ஃபர்ஸ்ட்லுக்

07:42 மணி

நயன்தாரா நடித்த ‘டோரா’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் அவருடைய அடுத்த படமான ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சற்று முன்னர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா, அதர்வா மற்றும் பாலிவுட் பிரமுகர் அனுராக் காஷ்யப் ஆகியோர்கள் இந்த ஃபர்ஸ்ட்லுக்கில் மிரட்டி உள்ளனர். ஒருவர் கையில் மற்றொருவரின் முகமூடியை கையில் வைத்துக் கொண்டுள்ளனர். அதாவது நயன்தாராவின் கையில் அதர்வா முகமூடியும், அதர்வா கையில் அனுராக் முகமூடியும், அனுராக் கையில் நயன்தாரா முகமூடியும் உள்ளது. பார்க்கவே வித்தியாசமாக உள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் நயன்தாராவின் ரசிகர்களை திருப்தி செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

Loading...

‘டிமாண்டி காலனி’ அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இயக்குனரின் முதல் படம் போலவே இந்த படமும் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில் கலந்து இருக்கும் என்று எதிர்பார்ப்பதால் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை இரவு 7 மணிக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. அதன்பின்னர் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ள இந்த படத்தை கேமியோ பிலிம்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது.

(Visited 23 times, 1 visits today)
The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393